பள்ளி வாகனத்தில் கேமரா மற்றும் வேகக்கட்டுப்பாட்டு சாதனம் இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் அம்மாவட்ட ஆட்சியர். இதன்பின் பேசிய அவர், பள்ளி வாகனத்தில் இது இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என கூறினார்.
சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ். சென்னையில் வளசரவாக்கம் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 7 வயது மாணவன் உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 கேள்விகளுக்கு 2 நாட்களில் விளக்கமளிக்க பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ்க்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவன் தீக்சித் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கு அனுப்பிய நோட்டீசை சுட்டிக்காட்டி வளசரவாக்கம் காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு […]