நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக புதிய தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதன்படி, 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி (35%) பெற்றுள்ளனர். விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு எழுதிய […]