தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.