சென்னை:மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் ரூ.61.70 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பி கூறப்பட்டுள்ளதாவது: “2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவையில் திருத்திய நிதிநிலை அறிக்கையின் விவாதத்தின் போது மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள்,சென்னைப் பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்கள். […]