தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,நாகை ,மயிலாடுதுறை,திருவாரூர்,ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி,பூவிருந்தமல்லி,திருவள்ளூர்,பொன்னேரி ஆகிய […]
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்,இது புதுச்சேரிக்கு மிக அருகில் காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முக்கிய அலெர்ட் : இந்நிலையில் காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (11.11.2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று(11.11.2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.