வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி, குமரிக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் முகக்கவசம்… கோவையில் அதிகம் பரவும் ஃபுளு காய்ச்சல்.! ஆனால் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தத்தால், […]
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, டெல்லியில் காற்று மாசு காரணமாக நவம்பர் 11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நாளை (9 ம் தேதி) முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால், […]
கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சீர்காழி வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை. சீர்காழி வட்டத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 19-ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு. வரும் சனிக்கிழமை (நவ.19) தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டதை, ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை பணிநாளாக அனுசரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், 19-ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை மறுநாள் 25-ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் […]
கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் […]
கோவை:வால்பாறையில் இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (ஜுலை 7),நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும்,தொடர் மழை பெய்து வருவதால் வாகன […]
புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை நாளைமுதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகம் மட்டும் அல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை நாளைமுதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் […]
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை மட்டும் அல்லாது உலகில் உள்ள பல நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது வரை 30-பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்த நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று […]
ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 3-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில், ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது […]
கனமழை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.இதன் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.