சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என அறிவிப்பு. அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி ஆணையர் உத்தரவு. பள்ளிக்கல்வித்துறையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். 152 DEO பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 98 DEO-க்கள் புதிய அலுவலகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள் என்று தனித்தனியே DEO-க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இணை இயக்குநர்கள் உமா, சசிகலா, அமுதவல்லி ஆகியோர் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் முதனமை செயலாளர் காகர்லா […]
பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை. தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரையில் காலை / மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு […]
நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன. இந்நிலையில்,வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும்,பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழ்நாட்டில் 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க எஸ்சிஇஆர்டி (State Council of Educational Research and Training) உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆங்கில புலமையை திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், […]
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு. தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வு மதிப்பெண்களை பள்ளிகள் […]
நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ,ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அனைவரும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டதை தெடர்ந்து, சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான […]
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் சான்று கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் (Fit India Movement) என்ற சான்று கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும் என்றும் மிக குறைந்த பள்ளிகளே பதிவு செய்துள்ள நிலையில், இது ஏற்புடையதல்ல என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பள்ளிகள் ஜூலை 20ம் தேதிக்குள் […]
ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் செல்லுபடிக் காலத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில அமைக்கவுள்ள வடிகால் வசதியுடன் கூடிய புதிய தார்சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். அது பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இவரிடம் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், இது குறித்து ஆலோசித்து தான் முடிவெடுக்கப்படும் […]