அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அசைன்மென்ட்களை மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 16ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் […]
ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விடுத்த கோரிக்கை பற்றி விரைவில் தீர்வு காணப்படும் என தேசிய தேர்வு முகமை உறுதியளித்துள்ளது. எனவே, ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என […]
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம். நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்திட இத்திட்டம், இணையதளம் இன்று தொடங்கப்படுகிறது. மேலும், நம்ம ஸ்கூல் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி […]
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம்பகவத்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.க்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் பதவியில் இருந்த இரா.சுதன் ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டார்.
மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. EMIS-ல் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களில் தவறு இருந்தால் டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் திருத்தவும் பள்ளிக்கல்வித்துறை […]
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர். இடைநிலை ஆசிரியர்களுக்கு பணபலம் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். பணபலன் வழங்காததை எதிர்த்து ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரன் தொடர்ந்த வழக்கில் ஆணையர் ஆஜரானார். உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணபலம் வழங்காதது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக […]
பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவும் நடப்பு செப்டம்பர் முதல் அமலுக்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பகுதி நேர ஓய்வு பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், தற்போது 60 என […]
தமிழகம் முழுவதும் பள்ளியளவில் காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி. தமிழகம் முழுவதும் பள்ளியளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது, வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் பள்ளிக்காலத்துறை உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை எவ்வித புகாருக்கும் […]
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, […]
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை. மத்திய அரசு தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தினாலும், அதனை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து, தமிழகத்திற்கென தனி கல்வி கொள்கையை உருவாக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தனி கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடம் கருத்து கேட்டு வருகிறது. அந்தவகையில், இன்று அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ள வளாகத்தில் மாநில […]
போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல். தமிழகத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வரமாக கடைபிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி […]
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதமிருமுறை தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு “ஊஞ்சல் இதழ்” வெளியிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான படைப்புத் […]
மலைகள் அதிகமுள்ள மாவட்டங்களில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் மலைப்பகுதி அதிகமுள்ள 7 மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஓராண்டு காலம் பணியாற்றிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில் […]
ஆசிரியர்களுக்கு வரும் 18-ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்த 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்புக்கு 20ம் தேதியும், 11-ஆம் வகுப்புக்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறந்ததை அடுத்து, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், […]
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்ந்து முழுமையாக நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்புக்கு 39%, 11, 12ம் வகுப்புகளுக்கு 35%, 1-9ம் வகுப்புகளுக்கு 50% வரை […]
அரசு ஊழியர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு என அறிவிப்பு. ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, பள்ளிக்கல்வித்துறை தனி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஆண்டுதோறும் 15 நாட்கள் அல்லது 2 ஆண்டுகளில் 30 நாட்களுக்கு உரிய ஈட்டிய விடுப்பினை சரண் […]
ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழில் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். தமிழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC, Conduct Certificate-ல் எந்த காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது. ஒழுங்கீனமாக நடக்கும் […]
பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின்னர் முத்தமிழ் பொழிப்பெயர்பு, இளந்தளிர் இலக்கியம், திசைதோறும் திராவிடல் திட்டத்தில் நூல்களையும் முதலமைச்சர் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதாக கற்க, பேச கூகுள் […]
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு. தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என பரவும் தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதன்படி, மே 6 முதல் மே 13-ஆம் தேதிக்குள் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித் […]
2020-21-ஆம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில், சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த பள்ளிகள் என்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும், தலா 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப அக்குழுவிற்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.