புதன்கிழமை மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தம்பால்னு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் கூப்பும் நகருக்கு வருடாந்திர ஆய்வுச் சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது,டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. மணிப்பூர் மருத்துவமனையில் காயமடைந்த மாணவர்களைச் சந்தித்த முதல்வர் என் பிரேன் சிங், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சென்னை:பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் நேற்று காலை பள்ளி வேன் ரிவர்சில் வந்தபோது,விபத்து ஏற்பட்டதில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவத்தில் வேன் ஓட்டுநர்,பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். இதனிடையே,இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு […]
பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் உள்ள தனியார் பள்ளி வேன் 35 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சோமந்துரை சித்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலையில் உடுமலை நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வேன், பள்ளி வாகனம் மீது மோதியது. இதில், பள்ளி வாகனத்தில் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த 5 வயது மாணவனின் வலது கை துண்டானது. மேலும் 8ம் வகுப்பு பயிலும் மாணவன் படுகாயம் அடைந்தான். பின்னர் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சரக்கு வேனை போலீசார் வளைத்து பிடித்தனர். […]
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திருகளப்பூர் கிராமத்தை சார்ந்தவர் மணிகண்டன் இவரது தங்கை மகள் கலைவாணி (2) பெரியகருக்கையில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் படித்து வருகிறார். கலைவாணி வேனில் பள்ளிக்கு சென்று மீண்டும் அதே வேனில் திரும்புவது வழக்கம். இந்நிலையில் இன்றும் வழக்கம் போல கலைவாணியை பள்ளிக்கு அழைத்து செல்ல அவரின் வீட்டு அருகில் பள்ளி வேன் வந்தது. அப்போது மணிகண்டனின் மகன் ராகுல் (2) வேன் அருகில் ஓடியுள்ளார்.எதிர்பாராதவிதமாக ராகுல் வேனின் […]
பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் […]