கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள நீர் வடியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்களும் பள்ளி கல்லூரிகள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இந்நிலையில், வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் (டிச,5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.5) வழக்கம்போல் இயங்கும் என […]
அமைச்சர் அன்பில் மகேஷ் 1- 8-க்கு பள்ளி திறப்பு எப்போது என முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த 1-ஆம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான […]
உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய பிறகு தற்போது தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. மேலும், மூன்றாம் அலை பாதிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் காரணத்தால் மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளை திறப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பல பள்ளி, கல்லூரிகள் தங்களது […]
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வழி வகுக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும், குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் வழியாகும் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாகும். 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனை […]
இன்றைய சூழ்நிலையில் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போது 98.5 மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார். 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் டேப் வழங்கப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர், தொடர்ந்து […]
6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், நடப்புக் கல்வியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி இவர்களுக்கு மட்டும் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர்களிடம் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் […]