Bus Accident: ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக விசரணையில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த குழந்தைகள் தற்போது அவசர மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.