ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான தில்லி பப்ளிக் பள்ளியிலிருந்து 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று கடந்த ஜூலை-04 ம் தேதி வியாழன்று ஹிசாரில் உள்ள மேயர் கிராமம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பள்ளிப்பேருந்து அங்கு நின்று கொண்டிருந்த பைக் உட்பட பல வாகனங்கள் […]
Bus Accident: ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக விசரணையில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த குழந்தைகள் தற்போது அவசர மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் அம்பர்நாத்தில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வைரலாகும் வீடியோ.! மும்பை, அம்பர்நாத் ரோட்டரி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் மினி பள்ளி பேருந்து, கிரீன் சிட்டி வளாகத்தில் திங்கட்கிழமை(செப் 26) காலை 6.50 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அப்பகுதி மக்களும், சுற்றியிருந்தவர்களும் விரைந்து செயல்பட்டு, கவிழ்ந்த பேருந்தில் இருந்து குழந்தைகளை மீட்டதால், பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாமல் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். பள்ளி பேருந்து ஓட்டுநர் வளைவில் பேருந்தை […]
சென்னை:பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் நேற்று காலை பள்ளி வேன் ரிவர்சில் வந்தபோது,விபத்து ஏற்பட்டதில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவத்தில் வேன் ஓட்டுநர்,பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். இதனிடையே,இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு […]
மதுரையில் மீனாட்சிபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் 5-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு சென்று வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படுவதாக கூறியிருந்தார். மாணவியின் கோரிக்கை அறிந்த மதுரை தொகுதி எம்.பி. இன்றிலிருந்து பள்ளிக்கு சென்றுவர மதுரை போக்குவரத்து பணிமனையிலிருந்து அரசு பேருந்தை இயக்க உத்தரவிட்டார். இந்த பேருந்து சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழகம் […]