தெலுங்கானா, யாதாவறி போன்கிரி மாவட்டத்தில் வசித்து வரும் சிறுவன் ஒருவன், சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்தார். அந்த மாணவன் விரதம் இருப்பதால், அவன் அந்த கோணத்தில் பள்ளிக்கு வந்தார். இதனை கண்ட அந்த வகுப்பாசிரியர், அந்த மாணவனை வகுப்பறைக்குள் வர மறுத்தார். மேலும், தனது பெற்றோர்களையும் பள்ளிக்கு வருமாறு கூறினார். இதனையடுத்து அங்கு வந்த அந்த மாணவனின் பெற்றோரையும் தாறுமாறாக திட்டினார். இந்நிலையில், அந்த மாணவன் மற்றும் அவனின் பெற்றோருக்கு ஆதரவாக வந்த கிராமத்தினர், அங்கு போராட்டம் […]