வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்பொழுது, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவித்தும், ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, […]
வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில்,மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கி, கற்பித்தல் பணியை துவங்க வேண்டியிருப்பதால், அனைத்து வகை பள்ளிகளையும் ஜூன் 3-ல் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.