பல கட்டுப்பாடுகளுடன் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில், 8 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளிலும் குறைந்த அளவு […]
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது – மத்திய அரசு. கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவிலை என்றும்இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு அறிக்கை […]
ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கும் என்ற தகவலை தெரிவில்லை. இதை பற்றி இன்னும் முடிவெடுக்க இல்லை என்றும் இப்போதைக்கு திறக்க முடியாது என்றும் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளி கல்வி நிறுவனங்கள் ஜூலை […]
பள்ளிகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 30ம் தேதி பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தகவல். பஞ்சாப்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 30ம் தேதி பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தகவல் தெரிவித்துள்ளார். ஜூன்-30ம் தேதிக்கு பின் மத்திய அரசு வெளியிடும் நெறிமுறைகள் பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் படி முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவுவதை 80% குறைக்க […]
கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து எந்தவிதமான இறுதிக்கட்ட முடிவும் எடுக்கப்படவில்லை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இந்நிலையில், 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பதில் அறிவித்துள்ளார். கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து எந்தவிதமான இறுதிக்கட்ட முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட […]
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் நீலகிரியின் மூன்று தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார், அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலூக்காவிற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி அவலாஞ்சி பகுதியில் ஒரே நாளில் 40 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
3 ஆண்டுகளுக்குப்பின், 12ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும். தனியார் பள்ளியில் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகையைவிட அதிகளவு அரசு பள்ளி மாணவருக்கு தமிழக அரசு செலவு செய்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்படும் எனவும் அதேபோல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்த விரைவில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் இருந்து 6 கல்லூரி மாணவிகள் டெல்லி குடியரசுதின கொண்டாட்ட பேரணியில் பங்கேற்கின்றனர். அதேபோன்று இரு அரசு பள்ளி மாணவி மொத்தம் 7 பேர் தேர்வாகியுள்ளனர். டெல்லியில் குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்ள சென்னை பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி ராமலட்சுமி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.