பார்வை மாற்றுத் திறனாளிகள் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு. பார்வை மாற்று திறனாளிகள் எவ்வித சிரமும் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கும் பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பார்வை மாற்றுத் திறனாளிகள் பொது வேலைவாய்ப்பில் பங்குபெற வாய்ப்பியிருந்தால் […]
ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. பட்ட படிப்பு: தாணிக்கண்டி,முள்ளாங்காடு,பட்டியார் கோவில்பதி,மடக்காடு, மத்வராயபுரம்,ஆலாந்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 23 மாணவிகள் மற்றும் 4 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த இம்மாணவர்கள் ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் […]
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் பயன்பெறும் […]
அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு முதல் எந்த உயர்கல்வியையும், அரசின் உதவித் தொகையுடன் பட்டியலின மாணவர்கள் பயில முடியும் என மத்திய அரசு […]
அண்ணா பெயரில் PhD மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 16,000 நிறுத்தப்படுகிறது என வெளியாகிய செய்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம். அண்ணா அவர்களின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 16,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது, இனி இது நிறுத்தப்படும் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் இந்த உதவித் தொகை நிறுத்தப்படும் என வெளியாகிய செய்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்படவில்லை என […]
வரும் கல்வி ஆண்டு முதல் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையினை மத்திய அரசு கைவிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் படி 8-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3000 அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை வரும் கல்வி ஆண்டு முதல் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்திருக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் […]