பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்கள் அறிவிப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்களை அறிவித்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டையில் பெயர் உள்ள 18 வயது நிரம்பிய நபர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.500 பணம், இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.