தாளாளரும், தலைமை ஆசிரியையும் பதவியேற்புக்கு முன்னரே கழிவறை கட்டப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தகவல். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்தாரர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். […]