டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பட்டியலின சமூகத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்ட்ட இடஒதுக்கீட்டு முறையில் உள்இடஒதுக்கீடாக அருந்ததியர்களுக்கு கூடுதலாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இதே போல பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டின் கீழ் மேலும் உள் இடஒதுக்கீடு வழங்கின. இந்த உள்இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2005இல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அப்போது தீர்ப்பளித்து இருந்தது. அதில், உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதனை […]
மதம் மாறிய பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு SC ஜாதி சான்று செல்லாது. அத்தனையும் மீறி வழங்கினால் அது போலி சான்றிதழ். – தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார். தமிழகத்தில் ஜாதிகளை வகுப்பு வாரியாக பிரித்து பிறப்படுத்தபட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் (MBC), தாழ்த்தப்பட்டோர் (SC/ST), இதர வகுப்பினர் (OC) என வகைப்படுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் (SC/ST) எனும் பிரிவுக்கு அரசு அவர்கள் வாழ்வு […]
SC / ST மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் ஆலோசனை குழு மாற்றியமைப்பு. SC / ST மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட SC/ST அலுவலர், பள்ளி/கல்லூரி முதல்வர், DEO, MLA என்று ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டியலினத்தவர் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தால் கைது செய்து விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் ஏற்கனவே தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது திரும்ப பெற்றது. எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்ய இடம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது .மேலும் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த உத்தரவை திரும்பப் பெற்றதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. புகார் […]
மதுரை:தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்காக உச்சநீதி மன்றத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இதை கண்டித்தும், இந்த சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரையில் ஏப்.11ம் தேதி ரயில்மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.அவர்கள் அறிவித்தபடி நேற்று பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு வந்தனர்.ஆனால் முன்னதாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சட்டதிருத்தம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை […]