மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் என்னும் மாவட்டத்தில் உள்ள தரூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு எஸ்பிஐ (SBI) வங்கி ஏடிஎம் மெஷினை திருடர்கள் கயிறு கட்டி இழுத்து திருடி உள்ளனர். இந்த அதிரவைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு பொழுது இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட அந்த ஏடிஎம் மெஷினையும் ரூ.21 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். அந்த வீடியோவில், ‘ரெயின் கோட் […]
பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான ஏடிஎம் பணப்பரிவர்த்தனை சேவையைத் தொடங்கியுள்ளது. இது தனது வாடிக்கையாளர்களை போலி ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு எதிராக திறம்பட பாதுகாக்கிறது. ஒரு அறிக்கையின்படி, மிக விரைவில் ஏராளமான வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் இந்த முறையைத் தேர்வு செய்யலாம். இது சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கும். ஜனவரி 1, 2020 அன்று OTP அடிப்படையிலான ஏடிஎம் பரிவர்த்தனை சேவையை SBI அறிமுகப்படுத்தியது. அனைத்து வாடிக்கையாளர்களும் […]
ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல். தமிழகம் முழுவதுமுள்ள பல எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மிஷினில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சவுகத் அலி எனும் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனை தவிர மற்ற மூவரையும் […]
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் கட்டணம்,ஓட்டுநர் உரிமம் புதிய விதி போன்றவை குறித்து தெரிந்து கொள்வோம். ஜூலை 1 ஆம் தேதி முதல்,ஓட்டுநர் உரிமம் மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் கட்டணம்: ஜூலை 1 ஆம் தேதி முதல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மூலமாக ஒரு மாதத்தில் நான்கு முறை மட்டுமே […]
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அமீர் என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில்,அவரது நண்பர் வீரேந்தரை போலீசார் டெல்லியில் இன்று கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஏடிஎம்களில் டெல்லியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் நூதன முறையில் பணம் திருடி உள்ள சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறியுள்ளது.சென்னையில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்னையில் உள்ள தரமணி, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம்களில் சென்சாரை மறைத்து இந்த இளைஞர்கள் பணம் திருடி உள்ளனர். கடந்த […]
ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது எஸ்பிஐ எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அன்றாடம் ஏடிஎம் மூலம் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற இந்த புதிய நடைமுறை நாளை (அக்.31-ம் தேதி) அமலாகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒரு சில வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கு உச்சவரம்பு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட எஸ்.பி.ஐ மின்னணுப் பரிமாற்றம், […]