மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார் தேனியில் வைத்து கைது செய்தனர். அப்போது அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, தேனி பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கருக்கு பல முறை […]
சென்னை : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பல்வேறு மாவட்டங்களில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யும் போது அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவதூறு வழக்குகள், கஞ்சா வழக்கு என பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதால், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது. அண்மையில் நீதிமன்ற […]
சென்னை : பெண்காவலர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் யூ-டியூபில் கருத்து தெரிவித்ததற்காக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. அவர் மீது கஞ்சா வைத்திருந்த வழக்கும் பதியப்பட்டது. இந்த வழக்குகளை அடுத்து சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை பதிவுசெய்தார். இந்த குண்டர் சட்டமானது முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து, சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கின் கீழ் மீண்டும் […]
டெல்லி: பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை, திருச்சி, கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி வருவதாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவின்படி சவுக்கு சங்கர் மீது கடந்த மே 12இல் குண்டர் சட்டம் பதியப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்திற்கு எதிராக சவுக்கு சங்கர் தயார் கமலா முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தொடர்பு கொண்ட 2 உயர் அதிகாரமிக்க நபர்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சேலம், சென்னை என பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால் சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் […]
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் தன்னிடம் அதிகாரம் உள்ளவர்கள் பேசியதாகவும் அதனால் இறுதி விசாரணையை இன்றே மேற்கொண்டேன் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். பெண்காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி கோவை போலீசார் பிரபல யூ-டியூர் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். அதே போல திருச்சி, சேலம், சென்னையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்து இருந்ததாகவும் வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து பல்வேறு வழக்குகள் சவுக்கு […]
சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் மீது கோவை, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து வந்த […]
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பேட்டி வீடியோவை வெளியிட்ட தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் மீது கோவை கிரைம் போலீசார், திருச்சி போலீசார், சென்னை, சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளன. இதில், ஏற்கனவே சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகியோர் கோவை மற்றும் திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு […]
சென்னை: சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார், சேலம், சென்னை, திருச்சி என பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், ஏற்கனவே கோவை கிரைம் போலீசார் முன்னதாக ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், அடுத்து திருச்சியில் பதியப்பட்ட வழக்கிற்காக நேற்று சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் இருந்து […]
சென்னை : யூ-டியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பின்னர், நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு […]
சென்னை : கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என யூ-டியூபர் சவுக்கு சங்கர் கோவை மருத்துவமனையில் முழக்கம் எழுப்பினார். பெண் காவலர்களுக்கு எதிராக தவறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் (மே 4) தேனி அருகே கைது செய்தனர். கைது செய்து கோவைக்கு அழைத்து வந்த போது அவர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் சவுக்கு சங்கர் கையில் அடிபட்டதாக […]