உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று 42 வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கினர். குர்பாஸ் சிறப்பாக விளையாட தொடங்கினர். இருப்பினும் 25 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் பார்ட்னர்ஷிப் மூலம் 41 ரன் எடுத்து ஒரு தொடக்கத்தை கொடுத்தனர். முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் […]
நடப்பு சீசனில் ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பையில் அதிக எதிர்பார்ப்புடன் நுழைந்தது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஆனால் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜொனாதன் ட்ராட்டின் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி சில வெற்றிகளுடன் அணி மீண்டு வந்தது. ஆப்கானிஸ்தானின் எழுச்சி இங்கிலாந்துக்கு எதிராக 69 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சியூட்டும் வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அடுத்த போட்டியில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ரன்னர்-அப் அணியான நியூசிலாந்திற்கு எதிராக 179 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும், […]
SAvsAFG: உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று 42 வது லீக் போட்டியானது, அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் வேகமாக ரன்கள் எடுக்கத் தொடங்கினாலும், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சில் வேகம் படிப்படியாகக் குறைந்தது. […]
SAvsAFG: 2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் அரைஇறுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தொடரில் இதுவரை 41 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று 42 வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. தென்னாப்பிரிக்கா இந்த தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்கவனே தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தேர்வாகியிருந்தாலும், […]