மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது முகநூலில் கூறியதாவது ,கடந்த காங்கிரஸ் அரசு ஆதாரை அமல்படுத்துவதில் அரை மனதுடன் இருந்தது.தற்போது பிரதமர் மோடியின் தலைமைலான அரசு ஆதார் வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளது , போலியான ஆதாரை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்ததால் அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பாகவந்துள்ளதாக தெரிவித்தார். இந்த தொகையின் மூலம் மாபெரும் மூன்று நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.