தமிழகத்தில் மூடப்படும் அரசுப்பள்ளிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் அதிரடியாக இறங்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். “கல்வி என்பது எல்லோருக்குமான அடிப்படை தேவை. அது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் நிறைய அரசுப்பள்ளிகள் தற்போது மூடப்படும் நிலையில் உள்ளது. ஏற்கெனவே இங்கு கல்வி வியாபாரமாக மாறி கொண்டே வருகிறது. அப்படி பார்க்கப்போனால் இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்ற ஒன்றே சாத்தியமில்லாமல் போய்விடும். உலக அளவில் […]