இலங்கை கடற்படையால் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரையும் வரும் ஜனவரி.18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளா, மீனவர்களுக்காக “க்ரூப் ஆக்சிடென்ட் இன்ச்சுரன்ஸ்”என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை கேரள மீன்வளத்துறை மற்றும் கேரள மீனவர்கள் நலவாரியம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மீன்பிடிக்க சென்று காணாமல்போகும் மீனவர்கள் மற்றும் படுகாயம் அடையும் மீனவர்களுக்குக் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 – 70 வயதுடைய மீனவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். மேலும் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்து மூலம் உயிரிழக்கும் மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம்வரை காப்பீடு கிடைக்கும் என்றும் கேரள அரசு […]
ஓகி புயலால் பாதித்த தமிழகத்திற்கு 2ம் கட்டமாக ₹561 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.அதேபோல் கேரள மாநிலத்திற்கும் 2-ம் கட்டமாக ₹513 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு. source:dinasuvadu.com
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் பற்றியும், எதிர்காலத்தில் புயல் பாதிப்புக்களை உயிர்ச்சேதமின்றி எதிர்கொள்வது பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ,நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே.ரெங்கராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்து விவாதித்தனர்.
தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள்,விவசாயிகள்,மலைவாழ் மக்கள்,மண்பாண்ட தொழிலாளர்கள் ,சிறு குறு தொழிலாளர்கள், வீடு இழந்தோர், புயலினால் உயிரிழந்தோர் ஆகிய அனைத்துக்கும் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து கோரிக்கை வைத்தார். ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க கப்பற்படை மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் சபர்மதி ஆற்றிலிருந்து ஒரு கடல் விமானத்தில் இப்போது பறந்து கொண்டிருக்கிறார். இந்த விமானம் தண்ணீரிலிருந்து டேக் ஆஃப் ஆகிப் பறக்கும். 125 கோடி இந்தியர்களுக்கு இந்த விமானம் பயனளிக்கும் என்கிறார் அவர். வளர்ச்சியின் அடையாளமாக இது காட்டப் படுகிறது. அனைத்து டெலிவிஷன் சானல்களும் குதூகலாமாகக் குதித்துக் கொண்டிருக்கின்றன. சில சானல்களில் இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப்போகிறது; இதுதான் வளர்ச்சி என்று கூவிக் கொண்டிருக்கின்றன. கடல் விமானத்தில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்து ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் மேலும் அவர் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்