கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தக்கலை அருகே உள்ள புலியூர்க்குறிச்சியில் 5வது நாளாக விவசாய அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை,வாழை,நெல் போன்ற விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று டிசம்பர் 23 – இந்திய உழவர் தினம். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சவுத்திரி சரண்சிங். அவரது பிறந்த நாளே தேசிய உழவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், உழவர் பிரச்சினைகள் குறித்து இந்திய மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.. இந்திய விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய மாதிரி சர்வேயில், 8 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை, […]
தேனி: முதல்போக பாசன வசதிக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து 1060 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் என இன்முகத்துடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாய பெருங்குடி மக்கள்.