பிசிசிஐ யின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ யின் தலைவராக இருந்து வந்த சவுரவ் கங்குலி சமீபத்தில் நீக்கப்பட்டதை அடுத்து தற்போது ரோஜர் பின்னி, பிசிசிஐ யின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ யின் 36 ஆவது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஜர் பின்னி 1983 ஆம் ஆண்டின் உலகக்கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி-20 உலகக்கோப்பை 2022க்கான இந்திய அணியிலிருந்து பும்ரா இன்னும் நீக்கப்படவில்லை என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென் ஆப்பிரிக்கா மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி-20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியை முன்னிட்டு பயிற்சி எடுக்கும் போது பும்ரா முதுகு வலி காரணமாக அந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் வலி தீவிரமடைந்துள்ளதால் இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டாவது டி-20 போட்டி, மைதானத்தின் ஈரம் காரணமாக தாமதாக தொடங்கியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாக்பூரில், நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டி ஈரமான அவுட்பீல்டு காரணமாக தாமதமாக தொடங்கி 8 ஒவர்களாகக் குறைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை குற்றம் சாட்டியுள்ளனர். உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியங்களில் பிசிசிஐ ஒன்றாகும் , ஆனால் மைதானத்தில் ஒழுங்கான மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாமல் தடுமாறிவருகிறது. ஆட்டம் நடக்கும் நாளன்று […]
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இனி வழக்கம் போல இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால் 2020 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வைத்து நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 இடங்களில் நடைபெற்றது, 2021 ஆம் ஆண்டில் இரண்டு பகுதிகளாக இந்தியா […]