டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்தது. இதைதொடர்ந்து, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு நுரையீரல் தொற்று அதிகமானதால் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக மருவத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.