கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநில ஆளுநராக, ததகதா ராய்க்கு பதிலாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரி கோவா ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநில அளுநராக சத்யபால் மாலிக் தலைநகர் ஸ்ரீநகரில் பதவியேற்றார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்த என்.என். வோராவுக்குப் பதிலாக புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுநாள் வரை சத்யபால் மாலிக் பிஹார் மாநில ஆளுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU