சத்யா சிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை ஹரிப்பிரியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கழுகு பட இயக்குனர் சத்யா சிவா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளார். ஏற்கனவே சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர்மகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதைபோல் சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவுடன் உடன்பிறப்பே படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த […]
இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில், கடந்த 2012-ம் ஆண்டு கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி, மாபெரும் வெற்றியை கண்ட திரைப்படம் ‘கழுகு’. தற்போது இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான சில நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.