சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப் போலவே நடிகர் சத்யராஜூம் திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார், திராவிடர் கருத்துக்களை கூறி வரும் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே சத்யராஜ் உள்ளார். இப்படியான சூழலில், இன்று சத்யராஜ் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தன்னை திமுகவில் இணைத்து கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக தலைமை அலுவலகமாக அண்ணா […]