கேரளா : 2024 நாடாளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்திர பிரதேசம் ரேபரேலி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. காலியாக இருந்த வயநாடு மக்களவை தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுடன் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் […]