சத்யராஜ் துணையுடன் எம்.ஜி.ஆர் மகனாக கிராமத்து பின்னணியில் களமிறங்கும் சசிகுமார்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் அடுத்து உருவாகும் திரைப்படம் எம்.ஜி.ஆர் மகன். இந்த படமும் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் சசிகுமார் நாயகனாகவும், மிருளானி நாயகியாகவும், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் கிராமத்து ஆட்களாக சத்யராஜ் மற்றும் சசிகுமார் இருக்கின்றனர். படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.