சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழப்பு! திமுக எம்.பி.கனிமொழி மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம்!
தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு எம்.பி.கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், பொது மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், இவர்கள் இருவரையும் துன்புறுத்திய காவல்துறையினருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், […]