பாலிவுட் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் காலமானார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடன இயக்குனராக வலம் வந்தவர் சரோஜ் கான். இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், மூச்சுத்திணறல் காரணமாக ஜூன்-20ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் இருவர், தாய் வீடு சிருங்காரம் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.