ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை […]
ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். – நளினி தகவல். முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் சிறையில் இருந்து அண்மையில் வெளியான நளினி, திருச்சி முகாமில் இருக்கும் தனது கணவர் முருகனை இன்று சந்தித்து விட்டு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ ராஜீவ் காந்தி கொலையில் உண்மை குற்றவாளிகள் யார் என எனக்கு தெரியாது. நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள். […]