ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலைவழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் முதல் குற்றவாளியான சரவணபவன் ராஜகோபாலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ராஜகோபாலின் உடல்நிலை சரியில்லை என கூறபட்டது. இந்த வழக்கில் அவர் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து இன்று சரவணபவன் ராஜகோபால் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.