காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதூர் கிராம பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் தான் 56 வயதுடைய சண்முகம். இவர் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத்தின் தலைவராகவும், திமுக சாலவாக்கம் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் ரியல் எஸ்டேட் மற்றும் சாலை காண்ட்ராக்ட் பணிகளை செய்து […]