சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார். இவருக்கு வயது (83). கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பத்ரிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். கடந்த 1940 பிப்ரவரி 24ஆம் தேதி சென்னையில் பிறந்த செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் இளம் வயதிலேயே பெற்றோர் இருவரையும் இழந்தார். பெற்றோர்கள் இறந்த பிறகு தனக்கு கிடைத்து காப்பீடு தொகையில் மருத்துவ படிப்பை முடித்தார். […]