டெல்லி பாஜக யுவ மோர்ச்சா செய்தித் தொடர்பாளர் சந்தீப் சுக்லா மற்றும் அவரது மனைவி அனிதா இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். டெல்லி, ததியா கிராமத்திற்கு அருகே, சந்தீப் சுக்லா மற்றும் அவரது மனைவி அனிதா அவர்களது, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு அண்டை வீட்டார் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதாப்கருக்கு சென்றுள்ளனர். அப்போது லாரி மீது மோதியதில், டெல்லி பாஜக யுவ மோர்ச்சா செய்தித் தொடர்பாளர், அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். […]