பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீப திருவிழா நடைபெறுகிறது. கொரோனா காரணமாக தீபத்திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சுற்றி 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 4 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு ஆலோசனையை வழங்கிவருகிறது, மேலும் தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 5.7.2020, 12.7.2020, 19.7.2020, 26.7.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழமை எந்த ஒரு தளர்வுகளும் இல்லாமல் முழு […]
இன்று முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா […]
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மாவட்ட ஆட்சியர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடியில் இதுவரை 113 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் […]
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மிகவும் ஆபத்தான ரசாயனக்கழிவுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மிகவும் ஆபத்தான ரசாயனக்கழிவுகளை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்த ரசாயனப் பொருள்களை அகற்றும் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது. மேலும் இன்னும் அகற்றப்படாமல் ஆலையில் வைத்திருக்கும் ரசாயனம் […]
தூத்துக்குடியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.ஆட்சியர் சந்தீப் நந்தூரி திடீரென ஆய்வு செய்தார். நேற்று தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்பொழுது பெயர் சேர்ப்பு படிவத்தை அலுவலரிடம் இருந்து வாங்கி ஆய்வு செய்தார். மக்கள் பலர் அங்கு வந்து தங்களின் வாக்காளர் அட்டை தொடர்பான திருத்தங்கள்,புதிதாக வாக்காளர் அட்டை பதிவு செய்தனர்.நேற்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு […]
தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் பின் செய்தியாளாருக்கு பேட்டியளித்த அவர் தூத்துக்குடி மாவட்டத்தில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்தார்.மேலும் ஸ்டெர்லைட் குறித்து கூறிய அவர் ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கைப் பொறுத்தவரை பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து தமிழக அரசு உயர் […]
ஸ்டெர்லைட் ஆலையில் பஞ்சாப் ஹரியான உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு 2 வாரத்தில் தனது ஆய்வுப் பணிகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடைபெற்று வருகிறது என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் […]