அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை திமுக அரசு வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தல். தாராபுரம்,அமராவதி ஆற்றில் இறங்கி குளித்த ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பதும்,அதற்குக் காரணம் தி.மு.க.வினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டது தான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிப்பது தனக்கு வேதனை அளிப்பதாகவும்,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி,இளம் பிள்ளைகள் உயிரிழப்புகளுக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து தீர […]
கூவம் ஆற்றில் அள்ளப்படும் மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்பலம்: “கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. சிறப்பான முறையில் வேடிக்கை: ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சர்யம்? இந்த மணல் கொள்ளை நடப்பது […]
எடப்பாடி அருகே இரவு நேரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை கிராமமக்கள் தடுத்து பிடித்துள்ளனர். சேலம் மாவட்டம் வேப்பம் பட்டி கிராம பகுதியில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதில் மணல் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஏரியில் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடந்துகொண்டு வருகிறது. இதே போன்று நேற்றும் நள்ளிரவு நேரத்தில் இந்த ஏரியில் இருந்து மணல் எடுத்துள்ளனர். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் கூட்டத்தால், வாகனங்களை […]
மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய பெண் அதிகாரியை மிரட்டிய மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்களை அஞ்சாமல் மடக்கி பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த மணல் கொள்ளை நாகையை அடுத்த நாகூர் கடற்கரையில், கடல் மணல் கடத்தப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் வந்துது. இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்த கனிமவளத்துறை அதிகாரிகளை கண்டதும், கடத்தல்காரர்கள் தப்ப முயன்றனர்.ஆனால்அவர்களை தடுத்த கனிமவளத்துறை இயக்குனர் , மணல் ஏற்றிவந்த 3 டிராக்டர்களை மடக்கி பிடித்தனர். […]
மணல் திருட்டு குறித்து பொதுநல மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் திருட்டில் ஈடுபட்டு பிடிபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். மேலும் வாகன உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தினாலும் அவர்களிடம் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை ஒப்படைக்ககூடாது. ஆனால் மாட்டு வண்டிகள் பிடிபட்டால், மாடுகளை மட்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கலாம்.வண்டிகளை ஒப்படைக்க கூடாது என்று காட்டமாக தெரிவித்தது மேலும் இது குறித்து உள்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. DINASUVADU