டெல்லி: ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் அவசரநிலை எனும் எமெர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பு 352வது பிரிவானது செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு எதிரான அனைத்து செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டு இருந்தன. ஜூன் 25, 1975 அன்று இந்திராகாந்தி ஆலோசனையின் […]