வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று சமத்துவம் மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி , வரும் 19ம் தேதி வரை சனி, ஞாயிறை தவிர வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசியல் தலைவர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனிடையே, மக்கள் நீதி […]
மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து களமிறங்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் […]
எனக்குக் கடவுள் சரத்குமார்தான் அவர் கட்டளையிட்டால் நிச்சயம் இந்த தேர்தலில் போட்டியிடுவேன் என ராதிகா சரத்குமார் உறுதி அளித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் சரத் குமாரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக மீண்டும் போட்டியின்றி சரத் குமார் தேர்வானார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழு […]
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத்குமார் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று பொதுக்குழு கூட்டம் ராதிகா சரத் குமார் தலைமையில் தொடங்கப்பட்டது. இதில் சரத் குமார் கலந்து கொண்டுள்ளார். சுமார் 1000 க்கும் […]