சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடிகை திரிஷா, நடிகர் விஜய் சேதுபதி வரவேற்றுள்ளனர். இருவரும் நடித்துள்ள ‘96’ படத்தின் நிகழ்ச்சியில் திரிஷா கூறும்போது, ‘‘சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. இவ்விவகாரத்தில் ஆழ்ந்த கருத்தை கூற இன்னும் அது பற்றி முழுமையாக அறிய வில்லை. ஆனாலும் […]
முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், மசூதிகளிலும் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா என கேள்வி எழுப்பியுள்ளார். கேரளா சபரிமலை கோயிலின் பல நூற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிடுவதன் மூலம், பிரச்சினைகள் நிறைந்த பெட்டியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்இந்தியாவில் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவை அந்தந்த மத நம்பிக்கையுடனும், தனிப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் இருப்பதாகவும் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் […]