பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84% மற்றும் 18.44% என அரசாங்கம் திருத்தியுள்ளது. தற்பொழுது, இந்த பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 மற்றும் டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது. இதனால், பெங்களூருவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.84 ஆக இருந்து ரூ.102.84 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் […]