சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 42 லட்சம் ரூபாய் செலவில் குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், குப்பைகள் அதிக அளவில் சேருகிறது. இவற்றின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் அதற்கான கட்டமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. குப்பை கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் ஏற்காடு ஏரியை […]
சேலத்தில் மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பொதுமேலாளர் எச்சரித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், சேலம் நகர்ப்பகுதியில் உள்ள மதுபான பார்களில், டாஸ்மாக் பொதுமேலாளர் முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த பாரில் ஆய்வு செய்தபோது, முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துமாறு பார் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி விவசாயிகளின் ஒப்புதலின்றி அடாவடித்தனமாக பவர்கிரிட் கார்ப்பரேசன் செய்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய அமைப்புகள் தலையிட்டு மின்கோபுரம் அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக மின்துறை அமைச்சரிடம் இப்பிரச்சனை தொடர்பாக, பிப்ரவரி 22ந்தேதியும், மார்ச் 6ந் தேதியும் நேரில் பேசப்பட்டது. இத்திட்டத்தை கேபிள் மூலம் செயல்படுத்த வேண்டும். நிலத்திற்கான இழப்பீடு குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதுவரை மாநிலம் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை வனத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சேலம் மாநகரத்திற்கு அருகே உள்ள ஊத்துமலை வனத்தில், நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பரவியது. மலை மீதுள்ள முருகன் கோயிலுக்கு கிழக்கு பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது. மலையில் உள்ள காய்ந்த மரங்கள், செடி, கொடிகள் கொளுந்து விட்டு எரிவதால், அந்த பகுதிக்கு யாராலும் செல்ல முடியவில்லை. தீ எரிவதை அறிந்த சமூக காடுகள் கோட்ட வனச்சரகர் வைரம் தலைமையில் 20 […]