வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு… மத்திய அரசு ஒப்புதல்!
Salary Hike : வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. […]