சேலம் அருகே தலை துண்டித்து சிறுமியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது போக்சோ நீதிமன்றம். சேலம் ஆத்தூர் அருகே சுந்திரபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக இளைஞர் தினேஷ்குமார் மீது கொலை, பாலியல் தொல்லை, தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு […]
விடுப்பு விண்ணப்பமும் அளிக்காமல், பணிக்கும் வராத ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஏராளமானவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்து […]
சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரியில் தக்காளி அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றது.ஆண்டுக்கு சுமார் 16,000 டன் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்கின்றனர். இங்கு விலையும் தக்காளி சென்னை, மதுரை, கோவை, கேரளா , பெங்களூரு உள்ளிட்ட பல பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.இந்நிலையில் மேச்சேரி விவசாயிகளின் கோரிக்கையான தக்காளி குளிர் பதன பாதுகாப்பு கிடங்கு அமைப்பது.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேச்சேரி பகுதியில் தக்காளி குளிர் பதன கிடங்கு விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், வேறொரு பெண்ணை மணமுடிக்க முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த ஸ்ரீராமன் ராணுவத்தில் உள்ளார். அகமதாபாத்தில் பணிபுரியும் அவரும், திருவண்ணாமலையை சேர்ந்த சித்ரா என்ற பெண்ணும் முகநூல் மூலம் காதலித்து, கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அகமதாபாத்தில் வசித்து வந்த அவர்கள், அண்மையில் சொந்த ஊர் வந்தனர். அப்போது, ஸ்ரீராமனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் […]
சேலத்தில், பெரிய நிறுவனங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், சேலத்தில், பிளாஸ்டிக் இல்லாத புத்தாண்டு என்ற பெயரில், மாநகராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதில், மாநகராட்சி ஆணையர் சதீஷ் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]
இயற்கை வளத்தை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் உடுமலையில் இளைஞர் ஒருவர் 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா.இவர், இயற்கைவளத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் சேலத்தில் இருந்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சேலத்தில் இருந்து தொடங்கிய இந்த மிதிவண்டி பயணத்தை, ஆந்திரா,உள்ளிட்ட மாநிலங்கள் வரை 20 […]
சுய ஆட்சி இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது! 8வழி சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க சென்ற சுய ஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்! சென்னை-சேலம் நகரங்களுக்கு இடையே 10,000 கோடி ரூபாய் செலவில் 8 வழி சாலை எனப்படும் பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது அதை […]
சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திடிரென பிடித்த தீ 4 மணி நேரமாக எரிந்து வருகின்றது. தீ பிடித்த உடன் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50 தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.