சீனாவில் இருந்து திரும்பிய அறந்தாங்கியை சேர்ந்த நபர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா வைரசால் தான் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கும் என்று மக்கள் மத்தியில் அச்சம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சக்திகுமார் என்பவர் கடந்த 4-ம் தேதி சீனாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 14-ம் தேதி ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் […]